நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் சில அரசுத்துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதிலும் காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பணி மற்றும் தொடர்ச்சியாக அரசாலும், ஊடகங்களாலும், இன்னும் சில தனிப்பட்ட மனிதர்களால் கொண்டாடப்படுகின்றது. தன்மானத்தையும் சுயமரியாதையையும் பற்றியும் அறியாத மனிதர்கள் ஒருநாளும் தாங்கள் செய்யும் எந்த ஒரு அருவருப்பான செயலுக்கும் அவமான உணர்ச்சியும் கொள்வதில்லை. மாறாக அவர்கள் தாங்கள் செய்யும் இழிவான செயலை எண்ணி பெருமிதம் கொள்கின்றார்கள்.
நாடும், வீடும் தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும், குப்பைகளையும் அப்புறப் படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்களின் உடல், உடைகளில் அசுத்தங்களை சுமக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை பெரும் மாற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதுவும் தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆட தொடங்கியிருக்கிறது. அது ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், என உயர்வு தாழ்வு பார்க்காமல் எல்லோரையும் பாரபட்சமில்லாமல் தாக்கி வருகிறது என்பதை நாம் அன்றாட செயல்களில் அறிகிறோம்.
கருணா நோய்த்தொற்று வேகமாய் பரவி வரும் இந்த சூழ்நிலையிலும் கூட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தான் அந்த மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
சானிடைசர்கள்,முகமுடி, காலணிகள் மற்றும் கையுறைகள் போன்ற மக்களுக்கு போதுமான அளவு வழங்கப்படவில்லை இதனால் நோய் தொற்று பாதிப்பு வாய்ப்பு மற்றவர்களை விட அவர்களுக்கு தான் அதிகம். துப்புரவு பணியாளர்களின் உண்மையான வாழ்நிலை இவ்வாறு இருக்கையில் அதை மாற்றுவதற்கான எந்த ஒரு முன் கையையும் எடுக்காமல் தங்களின் உயிரை பணயம் வைத்து பணி செய்வதால் அதை பாராட்டுகின்றோம் என்பதை கடைந்தெடுத்த பிடிவாதம் ஆகும். உண்மையில் அவர்கள் விருப்பப்பட்ட அந்த பணியை செய்யவில்லை என்பதை அவர்கள் மீது அந்த பனி திணிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காலம் காலமாக மனிதர்களின் கழிவுகளை அகற்றுவது, கழிப்பிடங்களை தூய்மைப்படுத்துவது பேரிடர் காலத்தில் உயிரை பணையம் வைத்து உழைப்பது, மலக்குழி மரணம், நச்சுவாயு மரணம் என வேதனைகள் மட்டுமே
அவர்களின் வாழ்வாகிப் போனது.
ஆண் பெண் இருபாலரும் கண்ணியமற்ற முறையில் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் நிகழாத நாளில்லை. பேரிடர் திருவிழா நான் பணிகளிலும் ஓய்வறியா உழைப்பு விதைக்கிறார்கள். சென்னை பெரு வெள்ளத்தின் போது தமிழகம் முழுவதிலிருந்தும் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு 50 ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மழைக்கால கவசம், காலனி, கையுறை, மருத்துவ கவனிப்பு அதிக ஊதியம், அதுவும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த ஆறு மாதங்கள் வளர்ச்சியையே குப்பை இயற்றும் மண்டிகள் தமிழக அரசு சிறப்பித்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குக்கிராமங்களில் அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கூட போய் சேரவில்லை அவர்களின் தினந்தோறும் வருமானம் 80 ரூபாய் தவிர.
தமிழ்நாட்டில் 64 ஆயிரத்து 583 துப்புரவு பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்த தமிழக அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கைகள்
1) தூய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கு தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர் பட்டியல் எடுக்க வேண்டும். ஒரு தடவை பணம் உதவி தொகை வழங்குவதோடு அவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும்.
2) வெள்ளையர் காலத்திற்குப் பிறகு கழிவு நீர் சுழற்சி மையங்கள் அதிகரிக்கப்படவில்லை. கிராமப்புறங்களிலும் கழிவுநீர் மேலாண்மை தொடங்கப்படவில்லை. கிராமப்புற தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரைகள் எட்டா அளவிலேயே உள்ளன. அவற்றை கிடப்பில் போடாமல் உடனே செயலாக்க வேண்டும் இதற்கான தமிழக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள், களமிறங்க வேண்டும்.
3) தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வயது வந்தவர்களுக்கு வாழ்வாதார திறன் வளர்த்து பயிற்சியும், கற்றல் உதவித்தொகை வழங்க வேண்டும்.
4) இன்றளவும் பாதாள சாக்கடை மரணங்களில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் அல்லது இன்றைய ரூபாய் மதிப்பிற்கு கூடுதல் தொகை அரசு சார்பில் வழங்க வேண்டும். தொடர்வண்டித் துறையில் தூய்மைப் பணியாளர் பணி என்பது இன்றளவும் முறை படுத்தப்படவில்லை, மேலை நாடுகளில் நவீன தொழில்நுட்பத்துடன் இருக்க வேண்டும்.
5) ஓய்வுபெற்ற தொடர்வண்டித் துறை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு துறையில் தகுதியான வேலைகள் கொடுக்க வேண்டும்.
6) தூய்மை பணியாளர்களுக்கான தேசிய நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் என்பது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைக்காக அவர்களின் மேம்பாட்டிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஆகும். இதுவரை மனித கழிவு அகற்றும் வேலையில் இருந்தவர்களில் குடும்ப உறுப்பினர்களை தொடர்ந்து கண்டறிந்து 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகளிலும், மழை தொட்டிகளிலும் நவீன இயந்திரங்கள் அமைக்க வேண்டும்.
7) கழிவுகளை அகற்ற வேண்டும் தமிழகத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் உதவியுடன் மனித கழிவுகளை அகற்றுவதற்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கழிவுநீர் உறிஞ்சி வதற்கான நவீன ரோபோக்கள் கண்டு பிடிக்க விட வேண்டும்.
8) இடைக்கால கோரிக்கைகளாக தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் ரூபாய் வஞ்சப்பொடி உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் ஆணை உள்ளவர்களை நிரந்தர பணியாளர்களுக்கு மாற்ற வேண்டும். பாதுகாப்பு கவசம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் மாதம் இருமுறை இலவச மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருத்துவம் பெற வேண்டும்.
உயர்ந்த பதவியில் அமர்ந்துகொண்டு வேலை வாங்கும் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வாகன வசதி இருப்பது போல் தூய்மை பணியாளர்களுக்கும் வசதி செய்து தரவேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறைக்கு சிறப்பான உண்டு உறைவிடப் பள்ளிகள் கல்லூரிகள் இருக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளோடு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஐநா உடன்படிக்கைகள் மற்ற இயக்கங்களில் கோரிக்கைகளை அனைத்தையும் தொகுத்து மக்களின் வாழ்வில் மாற்றம் காண போராட வேண்டியது சமூகநீதி பற்றார்களின் கடமையாகும்.