இன்ஸ்டாகிராமில் இதை கிளிக் செய்தால்.. உங்கள் பணம் அபேஸ்!!

Photo of author

By Jeevitha

Karnataka: இன்ஸ்டாகிராமில் ஒரு 25 வயதுடைய இளம்பெண் ரூ.2 லட்சத்தை வேலை கிடைக்கும் என நினைத்து மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.

இந்த காலத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினமான நிலையாக உள்ளது. அதனால் எந்த வழியிலாவது விரைவில் வேலை பெற வேண்டும் என எண்ணி பலரும் நினைக்கிறார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும் அது மிக சுலபமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களாக பகுதி நேர வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை பற்றி ஒரு இணைப்பு வந்ததால் அந்த பெண் அதை நம்பி க்ளிக் செய்துள்ளார். அப்போது அது தொடர்பான நிறைய தகவல்கள் வாட்ஸப்பில் வந்துள்ளது. அதில் Amazon Freshers job in India என்பதன் மூலம் வேலை செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என வந்துள்ளது. இதில் முதலில் ஒரு சிறிய முதலீடு செலுத்த வேண்டும் எனவும் பிறகு அது உங்களுக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி அவர் அக்டோபர் மாதம் 18 முதல் அக்டோபர் மாதம் 24 வரை சுமார் ரூ.1.94 லட்சம் செலுத்தி உள்ளார்.

ஆனால் அதற்கான எந்த ஒரு விவரங்களும் வராத நிலையில் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்பு தனது சேமிப்பில் இருந்த பணம் அனைத்தும் இழந்துவிட்டு பெங்களூரு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.