திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது!!

Photo of author

By Vinoth

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும்.

மேலும்  கார்த்திகை தீபத் திருவிழா (டிச.,04) கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார். மேலும் டிசம்பர் 13-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் இருந்த 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இதையடுத்து புயல், மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.  அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டி திருவண்ணமலை வரும் பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது என   மாவட்ட ஆட்சியர் கூறினார்.