அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

Photo of author

By Hasini

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 23. அப்போது அந்த நிருவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது, அங்கே பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வயது முப்பத்தி எட்டு.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அந்த பெண்ணை அவர் பயன்படுத்தி பல வீடியோக்களை எடுத்து வைத்துள்ளார். அதை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை பலவந்தமாக மிரட்டி 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணமும், 22 பவுன் வரை நகையையும் அவர் மிரட்டி வாங்கி உள்ளார் என்றும், என்னை இன்னும் தொடர்ந்து மிரட்டி கொண்டே இருக்கிறார் என்றும், போலீசில் அந்த பெண் இன்று புகார் தெரிவித்து உள்ளார்.

மேலும் தான் கேட்பதை தராவிட்டால் தனது நெருக்கமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரவிவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், அந்தப்பெண் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். போலீசார் இதனை பதிவு செய்ததோடு, அதன்பேரில் சூளைமேடு போலீசார் ஜீவரத்தினம் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை கைது செய்தனர்.

காலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? மனைவியே கணவனுக்கு இப்படி ஒரு செயலில் உதவி புரிகிறார். வரும் காலங்களில் பெண் பிள்ளைகள் இதுபோன்ற சவாலான பல விஷயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே யாரையும் எளிதில் நம்பாமல் இருந்தால் நான் பிழைத்துக் கொள்ளலாம்.