நமது சமையலறை அஞ்சறைப்பெட்டிக்குள் உள்ள கிராம்பு(இலவங்கம்) மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும்.காரம் மற்றும் கசப்பு தன்மை நிறைந்த கிராம்பு சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பு பொடி,கிராம்பு எண்ணெய் போன்றவை பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக திகழ்கிறது.
கிராம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
பாஸ்பரஸ்,பொட்டாசியம்,வைட்டமின்,சோடியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,மெக்னீசியம்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
தினம் ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலில் உள்ள கிருமிகளை அகற்றி உடலை வலுவாக்க உதவுகிறது.கிராம்பை பொடித்து வெறும் வாயில் போட்டு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம்,பல் கறை மற்றும் பல் சொத்தை நீங்கிவிடும்.
கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும்.சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக கிராம்பு தேநீர் பருகலாம்.கிராம்பு நீர் கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கிராம்பு நீர் பருகலாம்.கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட கிராம்பு நீர் பருகலாம்.வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக காலையில் கிராம்பு சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிராம்பை பொடித்து சூடான நீரில் கலந்து பருகலாம்.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கிராம்பு நீர் பருகலாம்.கிராம்பை இடித்து தண்ணீர் சேர்த்து குழைத்து நெற்றியில் பூசினால் தலைவலி விடும்.பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்க கிராம்பு நீர் பருகலாம்.ஆனால் கிராம்பு அலர்ஜி உள்ளவர்கள் கிராம்பை தவிர்ப்பது நல்லது.