முதல்வரின் அந்த செயலால்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண்!

Photo of author

By Sakthi

இன்று பல நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார் அங்கே அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை கருவிகளின் செயல்பாட்டினை ஆரம்பித்து வைத்தார் .

அதன் பிறகு தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண், கையில் ஒரு காக்கி கவருடன் நின்று தன்னை நோக்கி கைகூப்பி வணங்கியதை கவனித்தார் முதல்வர்.

உடனே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை அழைத்தார்.

முதல்வரின் கார் அருகே வந்த அந்த பெண் தன்னுடைய பெயர் மாரீஸ்வரி எனவும், நான் முத்தையா புரத்தை சேர்ந்தவர் எனவும், தன்னுடைய கணவர் கூலித் தொழிலாளி என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் அவருடைய வருமானத்தில் குடும்பத்தை சரியாக இயக்க முடியவில்லை என்றும், அரசு வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்து கையில் வைத்திருந்த மனுவை முதல்வரிடம் கொடுத்திருக்கின்றார்.

அந்த மனுவை வாங்கிக் கொண்ட முதல்வர் வேலை கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன், என்று கூறிவிட்டு சென்றார்.

மனுவை வாங்கி செல்லும் அனைவரும் சொல்லும் ஒரு வார்த்தை தான் என்று மாறி ஈஸ்வரியும் நினைத்து வீடு திரும்பி விட்டார்.

வீடு திரும்பிய அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புற ஆதார முறையில் வார்டு மேலாளர் பணி ஆணை வழங்கி உத்தரவு வந்திருக்கின்றது.

மாத சம்பளம் 15 ஆயிரம் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது, உடனே அழைப்பின் பெயரில் முதல்வரை நேரில் சந்தித்து பணிக்கான உத்தரவை முதல்வரிடம் பெற்றுக்கொண்ட அந்த மாற்றுத்திறனாளி பெண், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கின்றார்.

சாலையோரத்தில் நின்றிருந்த பெண்ணின் மனுவை பெற்று இரண்டு மணி நேரத்தில் வேலைக்கான உத்தரவை பிறப்பித்த முதல்வரின் நடவடிக்கையால், நெகிழ்ந்துபோய் உள்ளனர் தூத்துக்குடி மக்கள்.