நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தல்!! அச்சத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்!!

Photo of author

By Gayathri

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று அரை வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களும் அவ்வபோது நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல்நீராக போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாவது :-

தலைமைச்செயலகத்தில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றும், அதற்கு பதிலாக நிதிசாராத கோரிக்கைகளை தேர்தலுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதனை முதல்வரை அறிவுறுத்தியதாக பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல்நீராக போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 8ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியதாக வந்த செய்தியை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர், பாமக தலைவர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாமல் வஞ்சிப்பதாக அறிக்கை வெளியிட்டனர். இதற்கு தமிழக அரசு மற்றும் நிதியமைச்சர் சார்பில் பதில் அறிக்கைகள் வந்துள்ளன.

ஆனால், அறிக்கைகள் திமுக தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து எள்ளளவும் குறிப்பிடாமல் மிகவும் சிரத்தையுடன் தயாரிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.