பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Sakthi

Updated on:

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்கள் வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாதன், போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் நடிகர் சங்க பிரமுகருமான பூச்சி எஸ் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக டிபி கஜேந்திரன் இடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்த போது நானும் முதலமைச்சர் ஸ்டாலினும் கல்லூரியில் ஒன்றாக படித்து கொண்டு இருந்தோம். ஒரே வகுப்புத் தோழர் என்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால், என்னை வந்து சந்தித்திருக்கிறார் மற்றபடி வேறு எந்த விஷயமும் இல்லை என கூறியிருக்கிறார் கஜேந்திரன்.

ஆனாலும் ஸ்டாலின் வீடுவரை வந்து நலம் விசாரித்தது தொடர்பாக அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கவிதை ஒன்றை வெளியிட்டு அதில் தெரிவித்திருக்கின்றார் அந்த கவிதை வருமாறு,

முத்துவேலர் பேரனே முத்தமிழ் அறிஞரின் மைந்தனே கழகத்தின் தளபதியே தமிழகத்தின் முதல் உடனே உன் நல்லாட்சியில் வாழும் நான் ஒரு சிறு குடிமகன் தூரத்தில் இருந்து உன் முகம் பார்த்து துன்பத்தை துரத்தும் சிறியவன் படங்களை இயக்கினாலும் என்னை தேடி வந்த கிருஷ்ணனைப் போல என் வீடு தேடி வந்தாள் நான் வீடு பேறு அடைந்த நலம் விசாரித்து நானிலம் போற்றும் நின்றாய். நீங்கள் தான் நான் பெற்ற செல்வம் நட்புக்கு இலக்கணம் வகுத்த வாழும் நாளெல்லாம் உன்னை நினைத்தே இருப்பேன் உன்னை மறக்க நேரிடும் என்றால் மரிப்பேன் அன்புடன் டிபி கஜேந்திரன் முதலமைச்சருடன் வந்து முழு அன்பை தந்த பொய்யாமொழி புதல்வருக்கும், கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகன் அவர்களுக்கும், நன்றிகள் கோடி என குறிப்பிட்டிருக்கிறார்.