அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில்.இருக்கும் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் இருக்கின்ற திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் டிநகரில் இருக்கின்ற வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்..அதேபோல டிடிவி தினகரன் அடையாறு பகுதியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருகம்பாக்கத்தில் இருக்கின்ற சட்டசபைத் தொகுதியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். ஆனால் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு அவருக்கு அவரே தன்னுடைய வாக்கை செலுத்திக் கொண்டார்.