விவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்க! தமிழக அரசால் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய திட்டம்!

0
65

சமீபத்தில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரையில் இல்லாத விதத்தில் முதல் முறையாக தமிழகத்தில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியல் ரீதியாகவும், விவசாயம் ரீதியாகவும், பொது மக்களிடையேயும் மற்றும் அரசியல்வாதிகள் இடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறிப்பிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் வேண்டும் என்று 4 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்து இருக்கின்ற சூழ்நிலையில், முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக கொடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தமிழக மின்சார வாரியம் சார்பாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் 25 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட ஆரம்ப விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. சென்ற பத்து வருட கால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு லட்சம் மின் இணைப்புகள் தற்சமயம் வழங்கி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்று முதல் பல திட்டங்களை அறிவித்து அது தொடங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பணிபுரிந்து வருகிறார்கள். விவசாயிகளின் முகத்தில் புன்னகை காணும் விதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.