தன்னுடைய அரசியல் லாபத்திற்காக உயிரை காவு வாங்கிய திமுக! கொந்தளிக்கும் தமிழக மக்கள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நோய்த்தொற்று பரவல் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை பரவல் மிகத்தீவிரமாக நீடித்து வந்தது.நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கின்ற சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சமீபத்தில் அமைந்தது.


இந்த சூழ்நிலையில் ,இன்று முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார். நோய்தொற்று தடுப்பூசி வழங்குவது, நீட் தேர்வை ரத்து செய்வது போன்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாற்ற இருக்கிறார் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்று இருக்கின்ற ஸ்டாலின் அவர்களுக்கு இடையே நடைபெறப்போகும் முதல் சந்திப்பு இது என்ற காரணத்தால், தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியிடம் என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றார் என்பது குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருகிறார். அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். இன்று இரவு டெல்லியில் அவர் தங்கிவிட்டு அதனை அதன் பின்னர் நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதாவது காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்த நீட் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கியது திமுக என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் தற்போது அந்த நீட்தேர்வு நடைமுறையில் இருப்பதை பொறுத்துக்கொள்ள இயலாத திமுக தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அந்த தேர்வை எதிர்க்கிறது என்று பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அதோடு நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூர் மாவட்டம் குழுமூரை சார்ந்த ஒரு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் வரை சென்று மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். அப்பொழுதெல்லாம் வாய்மூடி அமைதியாக இருந்த திமுக அவர் உயிரிழந்த பின்னர் அதை வைத்து தன்னுடைய அரசியல் நாடகத்தை நடத்த தொடங்கியதாக பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.ஒருவேளை அந்தப் பெண் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தபோதே அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து அவர் பக்கம் திமுக நின்றிருந்தாள் அந்தப் பெண் நிச்சயமாக தற்கொலை முடிவுக்கு சென்றிருக்க மாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஆனால் ஸ்டாலின் எந்தவிதமான அரசியல் லாபத்தையும் எதிர்பார்க்காமல் அந்த பெண்ணிற்கு ஆதரவு கொடுத்து இருந்தால் நிச்சயமாக அவர் தற்கொலை செய்வதில் இருந்து அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று சாமானிய மக்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவருடைய இறப்பிற்குப் பின்னர் அவருடைய இழப்பை வைத்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டால் ஸ்டாலின் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.