பிழையை கண்டறிந்த இந்திய மாணவன்! ஃபேஸ்புக் அளித்த பரிசு! குவியும் பாராட்டுக்கள்!

0
84

இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சொன்ன மாணவனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் பரிசு அளித்து கௌரவித்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சில பிழைகள் இருப்பதை கண்டறிந்த மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசு அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சோலாபூரை சேர்ந்த இவர் பெயர் மயூர். இவர் கணினி பொறியியல் மாணவர். இவர் C,C++, phython போன்ற மொழிகளில் மிகவும் திறன் பெற்றவர். பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே தங்கள் தளங்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்தால் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்த நிலையில் இந்த மாணவன் இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து கூறியுள்ளான்.

இன்ஸ்டாகிராமில் பிரைவேட் அக்கௌன்ட் என்று இருந்தால் அவர்கள் பதிவிடும் பதிவுகளை போட்டோக்களை, ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க முடியாது என்று நாம் நினைத்து இருந்தோம். ஆனால் அதில் தவறாக உள்நுழைந்து மற்றவர்களின் பதிவுகள் போட்டோக்கள் வீடியோக்கள் என அனைத்தையும் பார்க்கலாம் என்ற பிழை உள்ளது என்று அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிழையை அவர் ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்த போட்டியில் பங்கேற்று குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில தினங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் இந்தப் பிழைகளை குறித்த கூடுதல் தகவல்களை கொடுக்குமாறு மயூரிடம் கேட்டு உள்ளது.

அது தொடர்பான மற்றும் தொழில்நுட்ப ரீதியான அனைத்து தகவல்களையும் அது எப்படி உள்நுழைய முடியும் என்ற தொழில்நுட்ப ரீதியான தகவல்களையும் அவர் அனுப்பியுள்ளார். இதனை கடந்த ஜுன் 15ஆம் தேதி என்று ஃபேஸ்புக் நிறுவனம் சரி செய்தது.

இதனை கண்டுபிடித்த இந்திய மாணவன் மயூருக்கு 30 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 22 லட்சம் பரிசு அளித்து கவுரவப்படுத்தி உள்ளது. மேலும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் சொல்லியுள்ளது.

author avatar
Kowsalya