டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! மாலையில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு!

0
188

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைநகரம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேசவிருக்கிறார்.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் பிரதமரிடம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது தொடர்பாகவும் அவர் பிரதமரிடம் பேசவுள்ளதாக தெரிகிறது.

அதாவது ஆளுநரிடமும் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிரதமரிடம் முதலமைச்சராக வலியுறுத்துவார் என சொல்லப்படுகிறது.

அதோடு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிலவைத் தொகைகள் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது மத்திய அரசின் மின்சார சட்ட திருத்தம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்குவது குறித்த குடியரசு தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும், தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் புதிய திட்டங்கள் தொடர்பாகவும், பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.

அதன் பிறகு குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளார்.

Previous articleலவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க..
Next articleஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!