அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
95

சுதந்திர தினம், குடியரசு தினம், உள்ளிட்ட நாட்களில் மத்திய, மாநில, அரசுகள் அரசு அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு சில பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கி தங்களுடைய உரையில் பேசுவது வழக்கமான ஒன்றுதான்.

அதேபோல பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு அந்தந்த துறைகளுக்கான உயரிய விருதுகளையும் வழங்கி அவர்களை மத்திய, மாநில, அரசுகள் கௌரவிக்கும்.

அந்த விதத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 75வது சுதந்திர தின விழா உரையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கடுமையான நிதிச் சுமைக்கிடையிலும், மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினடிப்படையில் தலைமைச் செயலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரையில், அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும், இந்த அகவிலைப்படி ஜூலை மாதம் 1ம் தேதி முதலே உயர்த்தி வழங்கப்படும், இதற்கான அரசாணைகள் மிக விரைவில் தனித்தனியே வெளியிடப்படும் என்றும், அவர் தெரிவித்திருந்தார்.