உடலை குளுமையாக்குவதோடு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் தேங்காய் பூ!! இதில் மில்க் ஷேக் செய்வது எப்படி?

Photo of author

By Divya

உடலை குளுமையாக்குவதோடு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் தேங்காய் பூ!! இதில் மில்க் ஷேக் செய்வது எப்படி?

தேங்காய் பூ ஆரோக்கியம் நிறைந்த ஒரு பொருள்.இவை உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.அது மட்டுமின்றி செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.

குடலை சுத்தம் செய்வது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது,கொடிய நோய்களை குணமாக்குவது போன்ற வேலைகளை செய்கிறது.

இந்த தேங்காய் பூவுடன் பேரிச்சம் பழம்,பால் சேர்த்து சுவையான மில்க் ஷேக் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பூ – ஒன்று
2)பால் – 1 கிளாஸ்
3)பேரிச்சம் பழம் – 5
4)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு தேங்காய் பூவை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

பால் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து அதை நன்கு ஆற விடவும்.பின்னர் 5 பேரிச்சம் பழம் எடுத்து விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய தேங்காய் பூ,பேரிச்சம் பழ துண்டுகள் மற்றும் காய்ச்சி ஆற வைத்த பால் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

அதன் பின்னர் சிறிது ஐஸ் வாட்டர் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு சுத்து விட்டு எடுக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் உடல் குளுமையாக இருக்கும்.

அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.எலும்புகளின் வலிமையை உறுதியாக்கும்.தினமும் தேங்காய் பூ மில்க் ஷேக் குடித்து வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.