காலை உணவை தவிர்த்தல்,மது அருந்துதல்,புகைப்பிடித்தல்,காரமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் வயிற்றுப் பகுதியில் புண்கள் உருவாகிறது.வயிற்றுப்புண்ணிற்கு அல்சர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.இந்த அல்சர் பாதிப்பால் வயிறு எரிச்சல்,மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு,வயிறு வலி,உடல் மெலிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
வயிற்றுப்புண்ணை குணமாக்கும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)சியா விதை – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டவும்.பிறகு தேங்காய் சக்கையை மீண்டும் மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.இதை ஏற்கனவே அரைத்த தேங்காய் பாலில் ஊற்றிக் கொள்ளவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி சியா விதையை அரைத்த தேங்காய் பாலில் ஊற்றி அரை மணி நேரத்திற்க்கு ஊறவிடவும்.சியா விதைகளுக்கு பதில் துளசி விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அரை மணி நேரம் கழித்து இந்த தேங்காய் பாலை பருகினால் வயிற்றுப்புண் குணமாகிவிடும்.அல்சர் இருப்பவர்கள் சியா விதை சேர்த்த தேங்காய் பாலை பருகி வந்தால் சிகிச்சை இன்றி அந்நோயை குணமாக்கி கொள்ள முடியும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும் மற்றொரு வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:
1)அருகம்புல் – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை:
ஒரு கைப்பிடி அருகம்புல்லை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு வேரை நீக்கிவிட்டு அருகம்புல்லை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இவ்வாறு செய்தால் வயிற்றுப்புண் அதாவது அல்சர் குணமாகிவிடும்.