கணவனுடன் உள்ள கள்ள உறவை விட்டுவிட கெஞ்சிய மனைவி! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

0
74

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த 43 வயதான நபர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே சென்றுள்ளது.

 

இந்நிலையில் அந்த கணவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அந்த பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலில் முடிந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த கள்ள காதல் சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் தெரிந்து விட்டது.

 

இந்த கள்ளக்காதலை தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்று தனது கணவரிடம் கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் கணவர் இந்த கள்ளத்தொடர்பை விடுவதாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த பெண் தனது கணவரின் கள்ளக்காதலிக்கு போன் செய்து உங்களிடம் பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். அந்த பெண்ணும் இவரை சந்திக்க சென்றுள்ளார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், தயவு செய்து என் கணவரை விட்டு விடு என்று காலில் விழாத குறையாக அந்த பெண் கணவனின் கள்ள காதலியிடம் கெஞ்சியுள்ளார்.

 

சரி இனி உங்கள் விசயத்தில் தலையிட மாட்டேன் என்று பாசாங்கு செய்வதை போல சொல்லிவிட்டு அந்த பெண் சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் அந்த பெண்ணின் கணவர் தனது செல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார். கள்ளக்காதலியை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவருடைய நம்பரும் ஸ்விட்ச் ஆப். இதனால் செய்வதறியாது அந்த பெண்ணும், அவருடைய குழந்தைகளும் காவல் நிலையம் சென்று காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனால் கோவை சரவணம்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Previous articleமலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?
Next articleஎடப்பாடி கோட்டையில் கருணாநிதி சிலைக்கு நேர்ந்த விபரீதம்.. சேலத்தில் தொடர் பரபரப்பு!!