இடிந்து விழுந்தது 5 மாடி கட்டிடம். மகாராஷ்டிராவில் பரிதாபம்

Photo of author

By Anand

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் கஜல்பூர் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

தகவலறிந்து மீட்பு படையினர் மற்றும் காவல் துறை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 15 க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் 50 மேற்பட்ட நபர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

உயிரழப்பு எதுவும் இல்லையென்றும், அதிக மழைபொழிவு காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தேசிய மீட்பு படையினர் புனேயிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்