கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கை ஆரம்பம்
கடந்த மாதம் நடந்த +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது, மொத்தம் 8.65 லட்சம் பேர் தேர்வு எழுதப் பதிவு செய்த நிலையில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, இந்நிலையில் இன்றே தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகள், 633 சுயநிதி தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் பதிவுச்சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் 164 அரசு கலை கல்லூரிகள், 633 சுயநிதி தனியார் கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான முதலமாண்டு மாணவர்களுக்கு (2023-2024) க்கான மாணவர்ச்சேர்க்கை இன்று முதல் இணையதள வாயிலாக தொடர்ந்து நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களை http://www.tngasa.in என்ற இணையதள வாயிலாக மே 8 முதல் மே 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்க முடியாத மாணாக்கர்கள் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களான (Admisiion Facilitation Ccentre –AFC) மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும் ரூ.48 செலுத்த வேண்டும் என்றும் மேலும் பதிவுக் கட்டணமாக ரூ. 2 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை ஆனால் பதிவுக் கட்டணமாக ரூ. 2 செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.