கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை!

Parthipan K

College student magic! Police investigation!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய  மகள் அனுஷா (19). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. எஸ். சி. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றார். மாலையில் அனுஷாவீட்டிற்கு திரும்பவில்லை.

அதனால் அவருடைய  தந்தை மணி அனுஷாவை பல இடங்கள் மற்றும்   உறவினர்களின்  வீட்டிலும் தேடிப்பார்த்தனர். மேலும் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.