தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் படி கூறியுள்ளார்.ஆனால் சைதன்யா பிரிட்ஜில் இருந்து ஐஸ் வட்டார் எடுப்பதற்கு பதிலாக ஆசிட் ஊற்றி வைத்த பாட்டிலை எடுத்துள்ளார்.அது தெரியாமல் சைதன்யா மள மளவென குடிக்க ஆரம்பித்துள்ளார்.ஆசிட் குடித்ததும் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.தகவலறிந்த போலீசார் அந்த கல்லூரியின் முன் இருந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.விசாரணை நடத்தியதில் கடை உரிமையாளர் கூறியது,தண்ணீர்க்கு பதிலாக அங்கு ஆசிட் வைத்த பாட்டிலை எடுத்து தவறி அருந்திவிட்டார்.இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.இது ஓர் விபத்து தான் எனக் கூறினார்.ஆனால் அந்த கல்லூரி மாணவர்கள் அந்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆசிட் குடித்ததில் சைதன்யாவின் வாய்,மற்றும் குடல் வெந்துள்ளது.அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.