கொள்ளுடன் இதை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பும் கரைந்துவிடும்!

Photo of author

By Kowsalya

கொள்ளுடன் இதை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பும் கரைந்துவிடும்!

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். எவ்வளவுதான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் அதை குறைக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் தான் பலர். அப்படி கொள்ளுடன் இதை சேர்த்து செய்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை சீராக குறைந்து வரும் இயற்கை வைத்திய முறையை தான் நாம் இங்கு பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. கொள்ளு 250 கிராம்

2. ஆலிவ் விதைகள் 100 கிராம்

3. கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளவும்.

2. அதில் அடுப்பை வைத்து கொள்ளை போட்டு நன்கு வறுக்க வேண்டும்.

3. கொள்ளு நன்கு வெடிக்கும் சத்தம் வரும் வரை வறுக்க வேண்டும்.

4. இப்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

5. இதில் 100 கிராம் ஆலிவ் விதைகளை போட வேண்டும்.

6. வாணலியில் உள்ள சூட் உடனே இதனை வறுக்க வேண்டும்.

7. பின் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட வேண்டும்.

8. மூன்றையும் வாணலியில் உள்ள சூட்டில் வறுக்க வேண்டும்.

9. இது நன்கு ஆற வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடு நீருடன் ஒரு ஸ்பூன் கலந்து சிறிது உப்பை சேர்த்து பருகி வரலாம்.

அல்லது சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியை போட்டு நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

அல்லது சாலட் வகைகளை சாப்பிடும் பொழுது இந்த பொடியை மேலே தூவியும் சாப்பிடலாம்.

இப்படி தொடர்ந்து நீங்கள் செய்துவர உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை விரைவாக குறையும்.