வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

Photo of author

By Divya

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

Divya

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.பணியாளர் தேர்வு ஆணையம்(SSC), மத்திய செயலகம்,ரயில்வே,இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய பணிகளுக்கான 384 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு 2018, 2019 நடத்தப்பட உள்ளது.

வேலை: மத்திய அரசு பணி

காலியிடங்கள்: மொத்தம் 384 இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: மத்திய செயலக ஸ்டெனோகிராபர் பதவிக்கு 17 பேர்,ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராபர் பதவிக்கு 19 பேர்,இந்திய தேர்தல் ஆணையம் ஸ்டெனோகிராபர் பதவிக்கு 2 பேர் மற்றும் இந்திய வெளியுறவு சேவை பிராஞ்ச் ஸ்டெனோகிராபர் பதவிக்கு 4 பேர் பணியமர்த்த பட இருக்கின்றனர்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 50க்குள் இருக்க வேண்டும்.மத்திய அரசின் விதிகளின் படி எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 25 கடைசி தேதி ஆகும்.

முகவரி:

Regional Director, Staff Selection Commission (Northern Region), Block No.12, C.G.O Complex, Lodhi Road, New Delhi – 110 003 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Computer Based Examination

2.Skill Test

3.Interview

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.