வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! நல்ல சம்பளத்தில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 12!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
28
#image_title

வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! நல்ல சம்பளத்தில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 12!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள Advisor பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 12-10-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி:

Defence Banking Advisor (DBA) – 3

Deputy Defence Banking Advisor (DDBA ) – 2

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 05

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ராணுவத்தில் பிரிகேடியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள்,இந்திய கடற்படையில் கொமடோர்,இந்திய விமானப்படையில் ஏர் கமடோர் பணி செய்தவர்களும் இந்த Advisor பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: இப்பணிக்கான ஊதிய விவரம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அல்லது குழு விவாதம் (Group discussion) அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

DBA மற்றும் DDBA பணிகளுக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: DBA மற்றும் DDBA பணிகளுக்கு விண்ணப்பிக்க 12-10-2023 கடைசி தேதி ஆகும்.