ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!!
ஆப்பிரிக்கா பகுதியின் ஒரு நாடான காங்கோ பகுதியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் நீரினால் பாதிப்படைந்து வருகின்றனர்.மழைக்காலத்தில் ஆற்றை கடக்க ஒரு பாலம் இருந்துள்ளது.அந்த ஊர் மக்கள் அடிக்கடி பாலத்தின் மேல் செல்வதால் ஒரு சில நடுக்கம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தது.
இதை சரிசெய்ய ஆற்றை கடக்க அதன் அருகே புதிய பாலம் ஒன்றை அமைக்க திட்டமிட்டனர்.திட்டமிட்டபடி புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.இந்நிலையில் அந்த பாலத்தை திறந்து வைக்க அதிகாரிகள் வருகை தந்தனர்.அப்போது பாலத்திம் மேல் அழகாக ஒரு ரிப்பன் கட்டப்பட்டிருந்தது.
அனைவரும் பாலத்திம் மேல் ஏறிய நிலையில் ரிப்பன் கட் அவிழ்கின்ற நேரத்தில் திடிரென்று பாலம் இடிந்து தண்ணீரில் விழுந்தது.இந்த விபத்தில் பாலத்தின் மேல்நின்று கொண்டிருந்த அதிகாரிகள் உட்பட மக்களும் கீழே விழுந்தனர்.திடிரென விழுந்த நிலையில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பின் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் வீரர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.கடவுளின் புண்ணியத்தால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.