2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எதிர்க்கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. எடப்பாடி தன்னுடைய பங்குக்கு இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். விஜய் கூடிய விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
தமிழகத்தில் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்பதற்காக எல்லா எதிர்கட்சியினரும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆயத்தமாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டவேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், விஜய், சீமான் போன்றோர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் நேரடியாகவே கூட்டணிக்கு அழைப்பு கொடுத்தார்.
இந்நிலையில் சீமான் நாங்கள் எப்பவும் போல தனித்தே போட்டியிடுகிறோம் என்கிற தொனியில் பேட்டி கொடுள்ளார். அதேபோல தவெக கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அதிமுக கட்சியை சேர்ந்த நபர்கள் நிறைய பேர் எங்கள் கட்சியில் தங்களை ஏற்கனவே இணைத்துக்கொண்டார்கள். அதிமுக கட்சியில் ஆட்களே இல்லை. அதனால் தான் நாங்க எப்பவும் அதிமுகவை பற்றி விமர்சிப்பதில்லை என்று பேட்டி கொடுள்ளார்.
குரான் மீது ஆணையாக பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றும், பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தவெகவின் அதிமுக நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக விலகிவிட்டார் ஆதவ் அர்ஜுனா. எடப்பாடி பழனிசாமி இப்படி வாய்விட்டு கூட்டணிக்கு அழைத்தும் இவர்கள் முரண்டு பிடிப்பது அதிமுகவினரை கடுப்பாக்கியுள்ளது.