சூர்யா அரசியலுக்கு வா! நல்ல தலைவர்கள் தேவப்படுறாங்க!!

விஜய்க்கு போட்டியாக அரசியலுக்கு வரவிருக்கும்  திரை பிரபலம்!!
வெளிப்படையாக  ரகசியத்தை உடைத்த- இயக்குனர். சூர்யாவின் அடுத்த படமான கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 26 தேதி சென்னையில் நடைபெற்து.  இந்த நிகழ்ச்சியில் கங்குவா திரைப்பட குழுவினர் மற்றும் RJ பாலாஜி, இயக்குனர்  போஸ் வெங்கட், கருணாஸ் போன்ற திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில்  இயக்குனர்  போஸ் வெங்கட்  பேசுகையில், “தலைவன் ஐஏஎஸ், டாக்டராக  இருக்கலாம், தலைவன் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.ஆனால் தலைவனுடைய முகம் அவனது ரசிகர்களை முட்டாளாக வைத்து இருக்க கூடாது,  அவனை அறிவாளியாக வைத்து இருக்க வேண்டும், அவனை படிக்க வைக்க வேண்டும் அப்படி பார்த்தால் நீங்கள்(சூர்யா) அரசியலுக்கு வரலாம்”, என்று பேசியிருந்தார்.   இந்நிலையில் இயக்குனர்  போஸ் வெங்கட்  தனது  X-வலைத்தளத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு  வருவதை  கிண்டல் செய்யும் விதமாக பதிவை ஒன்றை  வெளியிட்டார்.

அந்த பதிவில்  “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல் பள்ளிக்கூட ஒழிப்பு.. சினிமா நடிப்பு . மற்றும் அதீத ஞாபக சக்தி .. வியப்பு .. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு ??? பாப்போம்”..  என்று பதிவிட்டுள்ளார்.  இந்த விமர்சன பதிவு  சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும் தவெக தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.