மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்..

0
110
Comedian of Jaganmohini who passed away!! Deep condolences from the film world..
Comedian of Jaganmohini who passed away!! Deep condolences from the film world..

மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்..

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவையாளராக நடித்து புகழ்பெற்றவர். இவர் மாபெரும் நடிப்பை வெளிக்காட்டி வலம் வந்தவர் ஜே.கே சாரதி. இவருக்கு வயது 83 .இவர் விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று தந்த தெலுங்கு திரைப்படம் தான் ஜகன்மோகினி.

இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கடந்த சில மாதமாக வீட்டில்  அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இதனையடுத்து அவரின் உடல் நிலை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றது.இதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை   தீவிர சிகிச்சை பிரிவிற்கு இடமாற்றம் செய்திருந்தார்கள்.

இச்சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக  உயிரிழந்தார். இவர் மொத்தம் 372 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இம்மண்ணை விட்டு அவர் மறைந்தாலும் அவரின் நகைச்சுவை இன்றும் உலகில் எதிரொலிக்க தான் செய்கின்றது.

author avatar
Parthipan K