நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
185
Comedian Vivek passes away Shocked fans!
Comedian Vivek passes away Shocked fans!

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

அதன்பின் அடுத்தநாள் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு  ஏற்பட்டது.அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை  அளித்தனர்.அவரது இதயக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.அதன்பின் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருந்த நேரத்தில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரையுலகில் சென்ற வருடம் உயிரிழந்த பிரபலங்களின் மறைவே இன்றளவு அதன் பாதிப்பு குறையாத நிலையில்,நகைச்சுவை ஜாம்பவான் ஆன விவேக்கின் இழப்பு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது உஅடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது ரசிகர்களுக்கு இச்செய்தி பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

Previous articleவேப்ப இலையில் இவ்வளவு மருத்துவ பயன்களா? நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்
Next articleகுழந்தையில்லை என்று ஏங்கும் தம்பதிகளா? உடனே இதை முயற்சி செய்யுங்கள்