பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

Photo of author

By Pavithra

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

தமிழகத்தின் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும்,
முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருதியும்,கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும்,100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு,தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.இருந்த பொழுதிலும் சில தனியார் பள்ளிகள் 100 சதவீத கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களைப் வற்புறுத்துவதாகவும்,கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படமாட்டாது என்று மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கானது அண்மையில் விசாரணைக்கு வந்தபோது ஆன்லைன் வகுப்பு விதிமீறல் பள்ளிகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?என்றும், தனியார் பள்ளிகளின் கட்டண விதிமுறையை பின்பற்றாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி,தமிழக அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த பொழுது,தமிழக அரசு சார்பில், ஆஜரான வழக்கறிஞர்
முதல் தவணை கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வருகின்ற 30 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றும் அரசு உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 29 தனியார் பள்ளிகளிடம்,விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றும் விளக்கம் அளித்தார்.

எனவே தனியார் பள்ளிகளின் முதல் தவணை கட்டணத்தை வருகின்ற 30 – ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் அளித்துள்ளதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வற்புறுத்தினாலோ அல்லது முழு கட்டணத்தையும் செலுத்தக் கோரி நிர்பந்தத்தாலோ,தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியதை மறவாதீர்கள்.