மீண்டும் வசூல் கிங் என நிரூபித்த தளபதி! துணிவை விட வாரிசு இவ்வளவு அதிக வசூலா? 

மீண்டும் வசூல் கிங் என நிரூபித்த தளபதி! துணிவை விட வாரிசு இவ்வளவு அதிக வசூலா?  

கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியீடு செய்யப்பட்ட இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு மற்றும் தல அஜித் நடித்த துணிவு படங்கள் பற்றி தான் கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது.   இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் 9 வருடங்களுக்குப் பின் மீண்டும் நேருக்கு நேர் மோதியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இரண்டு படங்களில் எது அதிக வசூலை பெறும் எனவும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலுக்கு ரிலீசான இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் தான் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்.

வாரிசு படத்தின் 11 ஆம் நாள் முடிவில் வசூல் 250 கோடி என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். ஆனால் துணிவு படத்தின் வசூல் விவரம் பற்றி அந்த படத்தின் டீம் எந்தவித செய்தியையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இரண்டு படங்களும் பெற்ற வசூல் விபரம் வெளியாகி உள்ளது. தற்போது வரை கேரளாவில் விஜய் நடித்த வாரிசு படம் 12.4 கோடி வசூல் செய்துள்ளது. அதில் ஷேர் மட்டுமே 5.1 என தெரியவந்துள்ளது.  அடுத்து அஜித் நடித்த துணிவு படம் 4.9 கோடியை வசூல் செய்துள்ளது அதில் ஷேர் 2 கோடி  மட்டும் வந்துள்ளது.

இதிலிருந்து துணிவு படத்தை விட இரண்டு மடங்குக்கு அதிகமாக வாரிசு படம் வசூல் செய்து கேரளாவில் மீண்டும் வசூல் கிங் என விஜய் நிரூபித்துள்ளார். இரண்டு படங்களுமே நன்றாக ஓடியும் வசூல் செய்தும் கூட இதுவரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

 

 

Leave a Comment