புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல்

0
162
Budget 2023-24
Budget 2023-24

புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல்

புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது வருமான வரித்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை கவர்ச்சிகரமாக இருப்பதாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமல், பட்டய கணக்காளரின் ( CA) உதவி இல்லாமல் எளிமையாக வரியை செலுத்த முடியும்

டெல்லியை பின்னுக்கு தள்ளி அதிக வருமான வரி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலில் மும்பைக்கு அடுத்த படியாக, தமிழ்நாடு புதுச்சேரி இரண்டாவது இடம் பிடிக்கும் என தமிழக வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணன் முராரி தெரிவித்துள்ளார்

மத்திய பட்ஜெட் குறித்து FICCI தொழில் கூட்டமைப்பு சார்பாக கிண்டியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டல முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ், தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை தலைமை ஆணையர் கிருஷ்ணன் முராரி மற்றும் பிக்கி கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

நேரடி வரி மற்றும் மறைமுக வரி செலுத்துவதில் மத்திய பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து தமிழகம், புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டல முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் விளக்கி பேசினார்.

தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை தலைமை ஆணையர் கிருஷ்ண முராரி புதிய வரி விதிப்பு நடைமுறை கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்தார். எந்தவித குழப்பமும் இல்லாமல், பட்டய கணக்காளரின் ( CA) உதவி இல்லாமல் எளிமையாக வரியை செலுத்துவதற்கு வழி செய்யும் என்று தெரிவித்தார். இதனால் பட்டய கணக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் சேமிக்க முடியும். புதிய வரி விதிப்பு முறையில் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எல் ஐ சி உள்ளிட்ட திட்டங்களில் இணைந்து போதிய சேமிப்புகள் வைத்திருப்பவர்கள் புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் புதிதாக ஒரு இளைஞர் தனது தொழில்வாழ்க்கையை தொடங்கினால் அவர் தனக்கான சாதக பாதக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு செய்யட்டும் என்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த ஆண்டு வருமான வரி நல்ல முறையில் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் முற்போக்காகவும் நேர்மையாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் மாத இறுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி வசூலிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார். இதனால் டெல்லியை பின்னுக்கு தள்ளி அதிக வருமான வரி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலில் மும்பைக்கு அடுத்த படியாக, தமிழ்நாடு புதுச்சேரி இரண்டாவது இடம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Previous articleகுழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 
Next articleஅமைச்சர் பிடிஆர் குறித்து பரப்பப்படும் வதந்தி குறித்து அவரே அளித்த பேட்டி