குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 

0
283

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 

பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய அடி வயிற்று தொப்பையை குறைக்க பயன்படுத்திய பொடி தயாரிக்கும் வழிமுறையை காண்போம். அந்த காலத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இதை தயாரித்துக் கொடுத்தார்கள்.எனவே தொப்பை என்ற ஒரு விஷயம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் அவற்றை மறந்து விட்டதால் போதெல்லாம் தொப்பை சாதாரணமாகிவிட்டது.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 50 கிராம் சீரகத்தை வறுக்கவும். நன்கு வாசனை வரும் அளவு வறுத்ததும் வேற ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

அடுத்து 50 கிராம் ஓமம் இதையும் நன்றாக வாசனை வரும் அளவு வறுத்து விட்டு தட்டில் மாற்றி வைக்கவும். அடுத்து 25 கிராம் கருஞ்சீரகம். இதையும் நன்கு வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும்.

அடுத்து 20 கிராம் ஏலக்காயை வறுக்கவும். இந்த பொருட்கள் ஈசியாக அரைப்படுவதற்கும் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் ஏலக்காய் உதவும்..

அடுத்து 50 கிராம் அளவு சுக்கு பொடியை வறுக்கவும். அதே வாணலியில் சிறிது பசு நெய் சேர்த்து 20 கிராம் பெருங்காயத்தை வறுக்கவும்.

இவை எல்லாவற்றையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் 50 கிராம் அளவு கருப்பட்டி பவுடர் சேர்த்துக் கொள்ளவும். வேறு நாட்டுச்சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டாம். இந்த பொடியை காற்று போகாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

இந்த பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விடவும். இது நன்கு கொதித்ததும் ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது காலை 11 மணியளவில் அல்லது இரவு படுக்கப் போகும் முன்பு குடிக்கலாம். இதை 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அடிவயிற்றில் உள்ள தொப்பை என அனைத்தும் காணாமல் போகும்.

 

Previous articleமதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம்
Next articleபுதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here