காலில் அடிக்கடி ஏற்படும் ஆணி!!! இதை சரி செய்வதற்கு இந்த 4 டிப்ஸ் பயன்படுத்துங்கள்!!!
நமக்கு கால்களில் அடிக்கடி ஏற்படும் ஆணியை பிரச்சனையை குணப்படுத்த உதவும் எளிமையான 4 மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
காலில் ஏற்படும் ஆணி என்பது ஆபத்தான ஒன்று அல்ல. ஆனால் இது காலில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக ஆண்களை விட பெண்களுக்குத் தான் ஆணி பிரச்சனை அதிகம் ஏற்படுகின்றது.
காலில் ஏற்படும் ஆணி இரண்டு வகைகளில் ஏற்படும். அதாவது இந்த ஆணி கடுமையான ஆணியாகவும் ஏற்படும், மென்மையான ஆணியாகவும் ஏற்படும்.
மென்மையாக ஏற்படும் அணிகள் பொதுவாக வெண்மை நிறத்திலும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். இந்த மென்மையான ஆணிகள் பெரும்பாலும் கால்களில் விரல்களுக்கு இடையில் தோன்றும்.
கடுமையான ஆணி என்று அழைக்கப்படும் மற்றொரு ஆணியானது விதை ஆணி என்றும் அழைக்கப்படும். இந்த விதை ஆணிகள் பாதத்தின் அடிப்பகுதியில் ஏற்படும். அடுத்து இந்த ஆணி பிரச்சனையை சரிசெய்யும் மருத்துவமுறைகள் பற்றி பார்க்கலாம்.
ஆணியை குணப்படுத்தும் 4 டிப்ஸ்…
* காலில் ஏற்படும் ஆணியை குணப்படுத்துவதற்கு மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதை ஆணி மேல் தேய்த்தால் ஆணி குணமாகும்.
* விளக்கெண்ணெய் எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து நன்கு குறைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஆணியின் மேல் பூசினால் புண் ஆறிவிடும். பின்னர் ஆணி குணமாகும்.
* காலில் ஆணி இருக்கும் இடத்தில் வசம்பை வைத்து பற்று போட வேண்டும். இதன் மூலமும் காலில் ஏற்படும் ஆணியை குணமாக்கலாம்.
* காலில் இருக்கும் அணியை குணப்படுத்த பூண்டை பயன்படுத்தலாம். பூண்டை தட்டி அதன் சாறுடன் காலில் ஆணி இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் காலில் உள்ள ஆணி குணமாகும்.