மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம்பகுதிகள் 1944ஆம் ஆண்டு அரசு தனியாருக்கு99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. மெட்ராஸ் டி எஸ்டேட் இந்தியா லிமிடெட் 30 ஆண்டுகள் முடிந்த பின்னர் ஹிந்துஸ்தான்
லீவர் 20 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதற்கு அடுத்த புருக்பாண்ட்கம்பெனி
தற்போது உட்பிரையர் கம்பெனி நடத்தி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருநாளைக்கு 150 ஆயிரம் ரூபாயிலிருந்து 256ரூபாய் சம்பளம்வரை வழங்கப்படுகிறது.நிர்வாக வசதிகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மேல் மணல் ஆறு, வெள்ளிமலை,இரவங்கலாறு, மகாராஜா பெற்று என்று ஏழு பிரிவுகளாக பிரித்து கம்பெனி நிர்வாகம்செய்து வருகிறது.
டீ எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே மேகமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில்குடியிருக்க முடியும் என்பது சட்டமாக உள்ளது.இதற்கு அத்தாட்சியாக ஆண்டுதோறும் ஜூன் 1தேதி அரசு வாகனங்கள், தனியார்
வாகனங்கள் மேகமலை சாலையில் செல்ல முடியாது. தனியார் எஸ்டேட்வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாகமாரியம்மன் கோவில், மணலாறு,மேல் மணலாறு, வட்டப்பாறை, கேம் செட், நீர்வீழ்ச்சி, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு,
பூவாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக அனுமதி இல்லை.தற்போது உட் பிரையர் கற்பெனி 15க்கும்மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து உள்ளது.
தனியார் கம்பெனியின் அனுமதி பெற்ற பின்பே அங்கு செல்ல கூடிய சூழ்நிலைகள் தற்போது நிலவி வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளை
காண அரசு அதிகாரிகள் தனியார் கம்பெனியின் அனுமதி பெற்ற பின்பே
தடுப்புகளை தாண்டி அங்கு செல்ல கூடிய சூழ் நிலையும் நிலவி வருகிறது.வெள்ளி மலை- மேகமலைக்கு செல்லக்கூடிய சாலை கம்பத்தில் இருந்து மேகமலை
செல்லக்கூடிய சாலைகளும் நீண்ட நாட்களாக பொது மக்கள செல்ல அனுமதியின்றிதனியார் கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள புலிகள் சரணாலயங்களைசுற்றிப்பார்க்க கேரள வனத்துறையினர் 3.850 ரூபாய் கட்டி விட்டால் வனத்துறை வாகனங்களில் அழைத்துச் சென்று புலிகள் சரணாலயப் பகுதிகளில் சுற்றுலா அழைத்துச்
செல்வார்கள்.
கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் அமைந்துள்ள தனியார் நிலங்களை 160 கோடிரூபாய்க்கு விலைக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளில் உள்ள உட் பிரையர் கம்பெனிவசம் உள்ள அரசு நிலங்கள் ஆண்டுதோறும் சுமார் 10 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு பட்டா மாறுதல் பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.மேலும் மேகமலையில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ரிசார்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ரிசார்ட் கட்டுவதற்கு அரசு உரிய அனுமதி வழங்கியுள்ளதாக என்பதே கேள்விக்குறியாக உள்ளது.இந்த ரிசல்ட்டுகள் உரிய அனுமதியின்றி இங்கு கட்டப்பட்டுள்ள செயல்படுவதாகவும்
கழிப்பிடங்களில் கழிவுகள் திறந்த வெளியில் விடப்படுவதால் நீர், மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ரிசல்ட் களில் இரவு நேரங்களில் தீ மூட்டப்படுவதால் அங்கு வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
மேகமலை வனப்பகுதியில் மது அருந்துவதற்கு அனுமதி கிடையாது ஆனால் தினந்தோறும், வாரம்தோறும் மேகமலைக்கு நூற்றுக்கணக்கான மதுபான பாட்டில்கள் எடுத்துச் செல்லப்பட்டு மது அருந்தப்படுகிறது.தனியார் ரிசார்ட்டில் வளர்க்கப்பட்ட 5 நாய்களை சிறுத்தை தாக்கி உணவாக்கி உள்ளது.மேலும் ஒரு தனியார் ரிசார்ட்டில் இதுவரை வேலிகளில் சிக்கி 3 மான்கள் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
மேகமலையில் ஒரு ஏக்கர் நிலம் மூன்று கோடி ரூபாய்க்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மேகமலை சரணாலயப் பகுதிகள் தனியார் மயமாகி வருவது
கேலிக்கூத்தாக உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.