108 பள்ளிகளின் மீது புகார்! 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
40 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலித்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 108 பள்ளிகளின் மீது புகார் பதிவாகியுள்ளது. மேலும் 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 17 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் முதல் கட்டமாக 40 சதவீதம் பள்ளி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் அந்தப் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை அலுவலர்கள் புகார் தெரிவிக்கும் படி மின்னஞ்சல் முகவரி ஒன்றை வெளியிட்டு புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்பேரில் பெற்றோர்களிடம் இருந்து நிறைய புகார் வந்து குவிந்து உள்ளது.
பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இதுவரை 74 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் பெறப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகளின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.