கொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல

0
211

உலக நாடுகள் அனைத்துக்கும் தற்போது மிகுந்த தலைவலியாக இருப்பது கொரோனா வைரஸ்தான். இந்த வைரசால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் 9,459 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அங்கு 128 பேர் இறந்துள்ளனர். மலேசியாவில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் அந்நாட்டில் 62 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி 277 பேருக்கு நோய்த்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் சபா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

Previous articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.74 லட்சத்தை கடந்தது: இன்றைய நிலவரம்!!
Next article108 பள்ளிகளின் மீது புகார்! 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here