ஷாக் அடிக்கும் மின்கட்டணம்!!! பலமடங்கு உயர்ந்துள்ளதாக புகார்?

Photo of author

By Jayachithra

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் கட்டணம் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிர்ச்சி தரும் வகையில் மின் கட்டணம் மறைமுகமாக பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா நிதி நெருக்கடி காலத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.