இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!
இளம்பெண் கடத்தப்பட்ட புகார் தீவிரமாக தேடும் காவல்துறை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இளம் பெண் கடத்தப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப நாட்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள், பெண்கள் கடத்தல், தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறல் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கோ இல்லை வேலைக்கு செல்லும் பெண்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வீடு திரும்பும் வரை ஒருவித அச்சத்துடனே இருக்கின்றனர்.
பண்ருட்டி அடுத்த செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். இவரது மகள் அனிதா, வயது 22. இவர் கடலூர் கே.என்.சி கல்லூரியில் பி.ஏ வரலாறு முடித்துவிட்டு புதுச்சேரி லூகாஸ் டிவிஎஸ் கம்பெனியில் வேலை செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை கம்பெனி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் இருந்தார். நண்பகல் நேரத்தில், அனிதா வீட்டிற்கு அருகே உள்ள ஏரிக்கரைக்குச் சென்று வருவதாக கூறி, வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் வீடு அனிதா வீடு திரும்பவில்லை.
அவரைப் பற்றி அக்கம் பக்கத்தில் அனிதாவின் பெற்றோர் விசாரணை நடத்தினர். விசாரித்ததில் சில இளைஞர்கள் இளம்பெண் அனிதாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் குடுமியான் குப்பம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞன் நான்கு பேருடன் வந்து தனது மகளை கடத்தி சென்றதாக புதுப்பேட்டை காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் புதுப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட இளம் பெண்ணை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.