வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!!

வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!!

வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று (மே.03) இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தில், காஞ்சிபுரம் வரா மகாலட்சுமி சில்க்ஸ் உள்ளிட்ட 60 இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரக்கூடிய காஞ்சிபுரம் வர மகா லட்சுமி சில்க்ஸ் நிறுவனம், சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகிய இடங்களில் துணி கடைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவன கடைகளில் உயர் ரக பட்டு புடவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டும், சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் கடையில் வருமானவரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் கடையில் நேற்று காலை 9 மணி முதல் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமஹாலக்ஷ்மி பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பட்டு சேலைகள் விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு நடைபெற்ற உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.