மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார்-உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!

Photo of author

By Savitha

மதுரையில் பிரியாணிக்கு பிரபலம் பெற்ற அம்சவல்லிபவனில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு புகார் உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!!

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பிரபல உணவகமான அம்சவல்லிபவன் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த 30ஆம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.

இதனையடுத்து இந்த புகார் மனு மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறைக்கு அனுப்பபட்ட நிலையில் 31ஆம் தேதி உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதியன்று அம்சவல்லிபவன் உணவகத்திற்கு உணவுப்பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

அதில் புகார் குறித்த ஆய்வில் உணவகத்தில் உணவை கையாள்பவர்கள். கையுறை, முககவசம், தலையுறை மற்றும் அணியவில்லை, உணவக சுவர்களுக்கு வெள்ளை அடிக்கவில்லை, உணவுப் பொருட்களை கையாள்பவர்கள் தன்சுத்தம் பேணவில்லை, உணவு தயாரிக்கும் இடத்தில் பூச்சிகள், ஊர்வன எளிதாக வந்து செல்லும் நிலையில் இருந்தது.

சமைத்து வைத்திருந்த உணவு பாத்திரங்கள் திறந்த நிலையில் இருந்தன போன்ற குறைகளை நிவர்த்தி செய்து 7 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் மீது 15நாட்களுக்குள் உரிய ஏற்பாடுகளை சரிசெய்ய வேண்டும் எனவும், இது குறித்து 15 நாட்களுக்கு பின் மீண்டும் ஆய்வு செய்யப்படும் போது சரிசெய்யாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.