முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!

0
106
Complaint to the Chief Minister! SBI's negligence!
Complaint to the Chief Minister! SBI's negligence!

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!

இந்த காலக்கட்டத்தில் பணத்தை தவறாக வேறொரு அக்கவுண்டிற்கு போட்டுவிட்டால் ஓர் நொடியில் அவர்கள் எடுத்து விடுகின்றனர்.அவர்கள் மத்தியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் சற்றும் வேறுபட்டதாக உள்ளது.அதாவது,ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமியின் ஓய்வுதிய பணம் மாதம் தோறும் அவரது SBI அக்கவுண்டிற்கு வந்துவிடும்.இவர் மாதம் தோறும் வங்கிக்கு சென்று தனது பணத்தை எடுத்து வந்துள்ளார்.இம்முறை எடுக்க போகையில் பெருமளவு அதிர்ச்சிக்குள்ளானார்.

ஏனென்றால்,அவரது வங்கி கணக்கிற்கு கணக்கில் வராத ரூ.50 லட்சம் பணம் வந்துள்ளதாக வங்கி நிர்வாகி கூறியுள்ளார்.இவர் தனது ஓய்வுதிய பணத்தை எடுக்க முயன்றபோது வங்கி நிர்வாகி அவர்களிடம் உங்களது வங்கி கணக்கானது சைபர் க்ரைம் மூலம் போலீசாரின் பரிந்துரையில் முடிக்கி வைக்கப்பட்டுள்ளது.ஏனென்றால் உங்கள் அக்கவுண்டிற்கு திடிரென்று ரூ.50 லட்சம் வந்ததால் சந்தேகத்தின் பேரில் தற்பொழுது முடக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் வந்ததற்கான எந்த வித குறுஞ்செய்தியும் அவரது தொலைப்பேசி எண்ணிற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி வங்கி கணக்கின் பட்டியலை பதிவு செய்த போதும் எனது கணக்கிற்கு ரூ.50 லட்சம் வந்தது போல ஏதும் காட்டப்பட வில்லை என அந்த வங்கி நிர்வாகியிடம் கூறியுள்ளார்.மேலும் வங்கி நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஆசிரியரை பல காரணங்கள் கூறி அளக்களித்துள்ளர்.அதனையடுத்து அவர்,இதுகுறித்து வங்கி நிர்வாகிகளிடம் கேட்டால் போதுமான தகவல்களை தர வில்லை எனக் கூறி ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அவர்களின் அன்றாட செலவிற்கு பணம் எடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் கூறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து முதலமைச்சர் தனி பிரிவின் அடிப்படையில் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.வயது முதிந்தவர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வரும் போது ஏதேனும் பிரச்சனைகள் உண்டாக நேர்ந்தால் அந்த வங்கி நிர்வாகிகள் அவர்களுக்கு உதவாமல் அளக்களிப்பது மிகவும் வருத்ததிற்குரியதாகும்.

Previous articleநடிகர் சித்தார்த் மரணம்!! இரங்கல் தெரிவிக்கும் யூடியூப் சேனல்!!
Next articleBE படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!! பொறியியல் கல்லூரி தரும் சூப்பரானா வேலை !!