பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார் மனுக்களை விரைந்து ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார்.
இந்த கடிதமானது அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் கூறி இருப்பதாவது :-
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், புகார் மனு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்றாவது நாளுக்குள் அதற்கான ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது மட்டும் இன்றி இந்த புகார் மனுவின் மீதான நேற்றம் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவேளை புகார் மனுவில் உள்ள செயல் திறன்களை மேற்கொள்ள அதிக நாட்கள் தேவைப்படும் என்றால் அதனை பொதுமக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம் அவர்கள் கூறியிருக்கிறார்.
மேலும், கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சாத்தியமில்லை எனக் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்படலாம். பொது மக்களிடம் இருந்து பெறப்படும் குறைத்தீர்ப்பு மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்தில் தீர்வுக்காண வேண்டும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழங்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் கூட்டிக் காட்டி உள்ளார்.
எனவே, இனிவரும் காலங்களில் கட்டாயமாக மனுக்களின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாதந்தோறும் மேற்பார்வை இடவேண்டும் எனவும் தலைமை செயலாளர் முருகானந்தம் அவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.