8வழிச் சாலையை 2025க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அன்புமணி கண்டனம்

Photo of author

By Parthipan K

சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை 2025 க்குள் முடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது, “சென்னையில் இருந்து சேலம் செல்லும் 8 வழி சாலை அமைப்பதை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில்  2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தினை செயல்படுத்தி விடுவோம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் இந்த முடிவானது கண்டனத்திற்குரியது.

இது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்டங்கள் குறித்த அறிக்கையில் இந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-சேலம் எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததன் அடிப்படையில் அதனை தடை செய்தது. இந்த நிலையில் எட்டு வழி சாலை திட்டத்தினை செயல்படுத்தி 2025ல் முடிப்பது உச்சநீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாகும்.

மேலும், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில் மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் நீதிமன்றங்களை அவமதிக்கும் செயலாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அவமதிக்காமல், எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.