சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

Photo of author

By CineDesk

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

CineDesk

Computer training for prison inmates!! VIT University Presents!!

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

வேலூர் மத்திய சிறை நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம் ஒன்றை வேலூர் மத்திய ஆண்கள் சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய ஆண்கள் சிறை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி ஆரம்பித்தனர்.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை நல்வழி படுத்த, யோகா, விளையாட்டு, இசை போன்ற பயிற்ச்சிகளும், தண்டனை காலம் முடிந்து வரும் போது அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, அவர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் தொழில் தொடங்கி வருவாய் ஈட்ட முடியும்.

மேலும் இதை பற்றி சிறை அதிகாரிகள் கூறியதாவது, சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி அவர்களின் வழிகாட்டுதலின் படி, விஐடி பல்கலைகழகத்தின் மூலம் சிறை வளாகத்தில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக கைதிகளுக்கு எம்.எஸ்.ஆபீஸ் பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களது கணினி அறிவை வளர்த்துக் கொண்டு, தண்டனை காலம் முடிந்த பிறகு அது தொடர்பான தொழிலில் வருமானம் ஈட்டலாம்.