பீட்டா என்றால் தமிழகத்தில் அனைவரும் அறிவர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய உணர்வு மிக்க விளையாட்டு ஆகும். பீட்டா என்ற அமைப்பு மாடுகளை துன்புறுத்துவது தவறு என்று ஜல்லிக்கட்டை தடை செய்தது. அந்த தடையை தமிழக மக்கள் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் முன்னெடுத்து போராட்டம் செய்து அந்த தடையை தகர்த்து எடுத்தனர். இந்த போராட்டம் மெரினாவில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை மைய படுத்து கோலிவுட்டில் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்த படவிழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் விநியோகம் செய்யப்பட்ட சாப்பாடு பார்சலில் காண்டம் இருந்தது என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். காஞ்சிபுரம் அத்திவரதர், இன்றைய அரசியல், ஜல்லிக்கட்டு போன்றவை பற்றி திருமாவளவன் பேசினார். அவர் பேசியதில் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய பேச்சு தான் சர்ச்சைக்குரிய விசியம் அது தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன எனவும். இரவு நேரத்தில் போராட்ட களத்திலேயே பெண்களும் ஆண்களும் தவறான செயல்களில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது எனவும். மேலும் போராட்டம் முடிந்து பிறகு அனைவரும் சென்ற நிலையில் மெரினாவில் படகு ஓர மறைவுகளில் நிறைய காண்டம்கள் கிடைத்ததாகவும் என எனக்கு நிறைய பேர் கூறினர் என அவர் கூறினார்.
அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தினமும் பல்வேறு நிறுவனங்களும், உணவு பார்சல் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அப்படி கொடுக்கப்பட்ட பார்சலில் காண்டம் இருந்ததாகவும் சிலர் கூறியதாக திருமாவளவன் கூறினார்.
இது மெரினா புரட்சி படத்தை எடுத்தவர்களுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் சிலர் இதனை கூறினர். ஆனால் யார் அப்படி சொன்னது என்று என திருமா குறிப்பிடவில்லை. உணவுப் பார்சல்களில் காண்டம் இருந்தது என்றால் அதனை ஓபன் செய்த மறுநிமிடமே கொடுத்த நபரிடம் கேட்டிருக்கலாம் அல்லவா என்கிற கேள்விக்கு பதில் இல்லை.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை திருமாவளவன் கொட்சை படுத்துவதாக என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.