SET ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2024 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மார்ச் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் 6 முதல் 9 வரை நடைபெற்றது. தேர்வுகளிலும் பல்வேறு தாமதங்களைக் கடந்து ஒரு வழியாக 2025 ஆம் ஆண்டு இந்த தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.
மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வில் உத்தேச விதை குறிப்பானது மார்ச் 13ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. தகுதி தேர்வு எழுதிய தேர்வர்கள் உத்தேச விடை குறிப்பை வைத்து தங்களுடைய ஆட்சியபனைகளை இணையதளம் வழியாக தெரிவித்து வரக்கூடிய சூழலில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உத்தேச விடை குறிப்புகள் திரும்பப் பெறப்பட்டு இருப்பது தேர்வர்களை அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தரப்பு கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாவது :-
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாநில தகுதி தேர்வு கணினி மூலமாக மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை நடைபெற்றது என்றும் இதற்கான உத்தேச விடை தொகுப்பு மார்ச் 13 அன்று வெளியிடப்பட்டது என்றும் தற்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் மீண்டும் புதிய உத்தேச விடை குறிப்பானது வெளியிடப்படும் என்றும் அதில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சியவனைகள் இருந்தால் ரெஸ்பான்ஸ் சீட் மூலமாக மார்ச் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்களுடைய விருப்பங்களை பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.