ஜூலை 15ஆம் தேதி கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய அரசியல் தலைவர்கள் அய்யா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதையை செய்தனர். அந்த வகையில் திமுக கட்சியை சேர்ந்த சிவா கர்மவீரர் காமராஜர் பற்றி சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டார்.
காமராஜர் ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இது பற்றி சிவாவிடம் கூறியதாகவும், காமராஜர் இறக்கும் தருவாயில் அவரை சந்திக்க சென்ற கருணாநிதியிடம் இந்த நாட்டையும், மக்களையும் நீ தான் காப்பாற்றவேண்டும் என்று காமராசர் கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டதாக சிவா அண்மையில் பேட்டி கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. திமுக கூட்டணி தங்களுக்கு தேவை என்பதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் இதுபற்றி விமர்சிக்க மாட்டார்கள் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
வயல் வெளிகளில் கூட படுத்துக்கொள்ளும் குணம் படைத்தவர் காமராசர், அவரா ஏசி இல்லாமல் தூங்கமாட்டார்? காமராசரின் கடைசி காலகட்டத்தில் கருணாநிதி அவரை சந்திக்கவே இல்லை, பின் எப்படி காமராசர் கருணாவின் கைகளை பற்றி இருப்பார்? சுதந்திரத்துக்காக ஒன்பதரை ஆண்டுகள் போராட்டம் நடத்திய காமராசர் கருணாநிதியின் கைகளை பிடித்து நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டாரா? இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமாக திமுகவினர் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திருச்சி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காமராசர் உயிரோடு இல்லை என்பதற்காக திருச்சி சிவா வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி சிவா பேசுவது உண்மைக்கு புறம்பானது என்றும், திமுக கட்சியினர் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளால் தான் அந்த காலத்தில் காமராஜர் தேர்தலில் தோற்றார், காமராசருக்கு எதிராக பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றாவிடில் அவருடைய ஆன்மா நம்மை மன்னிக்காது என்று கரூர் எம்.பி. ஜோதிமணி பேட்டி கொடுத்துள்ளார்.