வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!

வீடியோ வெளியிட்டு கெத்து காட்டிய காங்கிரஸ்! அம்பலமான உண்மை!

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் அருகே திகுனியா அருகே பன்வீர்பூரில் உள்ள மாநில துணை முதல்-மந்திரி  கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த பல மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் காரணமாக விவசாயிகள் சேர்ந்து நிகழ்ச்சிக்கு வர இருந்த முதல் மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகளுடன் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு இருந்தனர். மேலும் அவர்கள் அந்த பாஜ அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறும் இருந்தனர். அப்போது பாஜக தொண்டர்களின் கார் அணிவகுப்பு அந்த வழியாக வந்தது. அதில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாகவும், பலமாகவும் மோதியது. அதே போல இரண்டு கார்கள் சென்றதும் குறிப்பிடத் தக்கது.

இதில் இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் காரணமாக ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பாஜகவினர் வந்த 2 கார்களை தீ வைத்து எரிக்கவும் செய்தனர். அதில் வந்தவர்களையும் மிகவும் பலம் கொண்டு தாக்கினர். இந்த பயங்கர வன்முறையில் மேலும் இரண்டு விவசாயிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து துணை முதல்-மந்திரி கேஷவ பிரசாத் மவுரியா தனது பயணத்தை ரத்து செய்து கொண்டார்.

தற்போது அந்த காரை விவசாயிகள் மீது வேண்டுமென்றே மோதியதாகவும், மேலும் அந்த காரில் மத்திய மந்திரி அஜஸ் மிஸ்ராவின் மகன் இருந்ததாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். அத்துடன் மந்திரியின் மகன் விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் அஜஸ் மிஸ்ராவோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை, அவர்கள் வேண்டுமென்றே கூறுகிறார்கள் என்று கூறினார்.

விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அது உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்கிம்பூர் கெரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இணைய சேவைகளையும் துண்டித்துள்ளனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசாரையும் அரசு அதிகாரிகள் ஆணைக்கிணங்க குவித்து வைத்துள்ளனர். இதற்கிடையே தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் நெஞ்சை பதை பதைக்கும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் சாதாரண விவசாயிகளின் பின்புறம் பக்கமாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றி விட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல் செல்வதாகவும் உள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே இந்த வீடியோ பார்ப்பவர்களையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment