தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!!

0
108

தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் நாளை மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அதில், நாளை முதல் கட்ட வாக்குப்பதிவும், 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. மேலும், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது. பள்ளிகளில் தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்பதனாலும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் எனவே 5,6 மற்றும் 8,9 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.